புலனாய்வுப் பிரிவுகளில் கோத்தபாயவின் உளவாளிகள்:

382

 

புலனாய்வுப் பிரிவுகளில் இருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உளவாளிகள் புதிய  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி வரும் சிறந்த தொடர்புகளை சீர்குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற பாரதூரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வந்த 10 தமிழர்கள் கட்டுநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரன் சம்மந்தமாகவும் உடனடியாக சட்டத்தை செயல்படுத்துமாறு சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய  போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஜெயக்குமாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவரை தமது வடக்கு விஜயத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்திருந்த போதிலும் புலனாய்வுப் பிரிவினர்  இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னை சந்தித்த தினத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்ப, விமான நிலையம் சென்ற போது முருகேசு பகீரதி என்ற பெண்ணையும் அவரது 8 வயது மகளையும் கைது செய்தனர்.

முருகேசு பகீரதி என்ற பெண் நாட்டில் சில வாரங்கள் தங்கியிருந்த போதும் யாரும் அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அதேவேளை ஐ. நா மனிதவுரிமை பேரவையில் உரையாற்றிய மங்கள சமரவீர முந்தைய அரசாங்கத்தின் சில அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

 

SHARE