புலம்பெயர் உறவுகளே! இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்- அரியம் எம்.பி

375

புலம்பெயர் உறவுகளே! இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்- அரியம் எம்.பி

புதன்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காட்டை சேர்ந்த சவுதியில் தொழில் புரியும் ஒருபிள்ளையின் தந்தையான ரகுபதி கனகசூரியம் (வயது 34) என்பவர் மத்திய கிழக்கு நாடான சவுதிக்கு தனது வறுமை நிமித்தம் தொழிலுக்காகச் சென்று மீண்டும் நாடு திரும்பும் போது
இலங்கை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார் என்ற செய்தியினை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினுடாக அவரது வீட்டிற்கு அறிவித்துள்ளதாகவும் அவரகொழும்பில் குற்றப்புலனாய்வுபிருவில்தடுத்து வைத்துள்ளதாகவும் அரியம் எம்.பி தெரிவித்தார்.
ariyam
தற்போது நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறுகின்றார்கள்அவ்வாறு நல்லாட்சி நடைபெறுமாக இருந்தால் இவ்வாறான கைதுகள் எவ்வாறு நடைபெறும் இங்கு கைது செய்யப்பட்டவர் பல தடவைகள் இந்த விமான நிலையத்தினூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்திருக்கின்றார். ஆனால் நேற்று நாடு திரும்பிக் கொண்டிருக்கும்போதுபுலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த நாட்டிலே பல இன்னல்களை அனுபவித்த மக்கள் தங்களது நிலைமையை சீர்செய்வதற்காக தமது உறவுகளை பிரி்ந்து உழைப்பிற்காக சென்று தமது உறவுகளிடம் வரும் வேளை இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
புதிய ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்னர் இந்த நாட்டிலே நல்லாட்சி நடைபெறுகின்றது.என்று கூறும் இந்த அரசாங்கத்தில் 100 வது நாளான நேற்றுடன் 17வது கைதாக இவரது கைது இடம்பெற்றிருக்கின்றது. ஆகவே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கு ஒரு ஸ்திரமான அரசியல் அதிகாரம் வரும் வரைக்கும் இந்த நாட்டிற்குள் பிரயாணத்தை மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் விடுதலைக்குப்பதிலாக திட்டமிட்டு கட்டுனாயகா விமானநிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதை காணமுடிகிறது எனவும் அரியம் மேலும் கூறினார்.
இந்தநாட்டில்இன்னுமொருபொதுத்தேர்தல் வந்து அரசியலில் ஸ்திரமான தன்மை வரும் வரைக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்நிமிர்த்தம் சென்ற முன்னாலபோராளிகளும இலங்கை வருவதனை தவிர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். நேற்று முன்தினம் (22/04/2015) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ரகுபதி கனகசூரியம் கைது செய்யப்பட்டமை பற்றி கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.

 

SHARE