புலம்பெயர் தமிழர் சந்திப்பு! தமிழர்களின் உடனடி தேவைக்கானது மாத்திரமே: சுமந்திரன்

325

 

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கும் இடையில் லண்டனில் நடைபெறவுள்ள பேச்சு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அல்லது இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பானது அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

sumanthiran-

இந்தப்பேச்சுக்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி தேவைகள் குறித்தே பேசப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் பேரவையினருடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் லண்டனில் மையம் கொண்டு இயங்கிவரும் தொலைக்காட்சி ஒன்று இந்த சந்திப்பு குறித்து சுமந்திரனிடமும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரனிடமும் விளக்கங்களை கேட்டது.

இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக அணுகுவது எவ்வாறு என்பது தொடர்பாகவே தாம் பேசவுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்களின் நலவாழ்வுக்காக நிதியுதவிகளை மேற்கொள்ளவுள்ள நிதிநிறுவனங்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE