புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

333

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு, புலம் பெயர் அமைப்புக்களுக்கு மகிந்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.

அந்த தடையை தொடர்ந்தும் நீடிப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று வாரப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோது பிரதி வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்காதிருக்கும் வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தழிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட 15 அமைப்புக்களுக்கும், தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE