புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் – வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அன்பான வேண்டுகோள்…

276

 

புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் – வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அன்பான வேண்டுகோள்…
unnamed (5)
கடந்த அறுபது வருட யுத்தத்தினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே, கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகணத்தில் நான் அமைச்சு பதவியை  பொறுப்பேற்றதில் இருந்து பல கிராமங்களுக்கு சென்று வந்திருக்கின்றேன். அவ்வாறு சென்றபோது எனது மனதை மிகவும் பாதித்த ஒரு விடயமாக  எம் இனத்தை பாதுகாப்பதற்க்காக சென்றவர்கள் எம் எதிர்கால சந்ததி  சுதந்திரமாக வாழ வேண்டும் என்று பல தியாகங்களை செய்தவர்கள் இன்று நடுத் தெருவில் ஒரு வேளை உணவுக்கு அடுத்தவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர் இவர்களை பாதுகாத்து இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டிஎளுப்பவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
அந்த வகையில் 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி எனது  வரவு செலவு திட்ட வாசிப்பில் அவர்களுக்கான வேலைத்திட்டத்தினை எனது கொள்கை பிரகடனமாக கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே.அதனடிப்படையில் ஏறக்குறைய 43 மில்லியன் ரூபா ஒதுக்கீட செய்துள்ளேன். ஆதன் பின் தொடர் நடவடிக்கையாக மூன்று வகையான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. யூன்மாத இறுதிவரை 12676 குடும்பங்களின் விண்ண்ப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் கட்டமாக  தழிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களான 324 குடும்பங்கள் பதிவு செய்துள்ளனர்.அதனடிப்படையில் விண்ண்ப்பம் கிடைக்கப்பட்ட பெற்ற குடும்பங்களை சந்தித்து அவர்களினால் என்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டால் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்ற விடயத்தை அறிந்து அவர்களுக்கு என தலா 50000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத் திட்டத்திற்கான உள்ளீடுகள் இம்மாத இறுதியில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டமொன்று அமுல்படுத்த  இருக்கும் போது வெளிமாகாண கைதிகளும் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இருப்பதை அறிந்து அவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த எண்ணி அவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டகளப்பு, திருகோணமலை,  கண்டி, புத்தளம், கொழும்பு, பதுளை போன்ற மாவட்டங்களை சேர்ந்த  விண்ணப்பதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர் இவர்களுக்கான வேலைத்திட்டமும் உடனடியாக ஆரம்பமாகவுள்ளது.
வருகின்ற பாராளளுமன்ற தேர்தலின் பின் எஞ்சி இருக்கின்ற ஏனைய இரண்டு வகையான படிவங்களான புனர்வாழ்விலிருந்து வந்து குடும்பங்களுடன் வாழ்பவர்களுக்கும் யுத்த்தால் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கும்  என்னால் கனிசமானவர்களுக்கே உதவ முடியும்
எனது புலம் பெயர் உறவுகளே ஏற்கனவே பதிவு செய்ய்ப்பட்ட குடும்பங்களக்கும் இன்னும் பதிவு செய்கின்ற குடும்பங்களுக்கும் உதவ வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.கடந்த காலங்களில் நீங்கள் ஆற்றிய சேவை அளப்பரியது இருப்பினும் கடந்த காலங்களில் உங்களினால்  மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி முற்று முழுதாக உரிய மக்களுக்கு சென்றடைந்ததா என்பது கேள்விக்குறி அத்தோடு அவ்வாறு நிதியை பெற்றவர்கள் தமது நிர்வாக செலவுக்கே அதிகளவு நிதியைபயன்படுத்தி உள்ளனர் என்பதையும் நீங்கள் அறீவீர்கள் ஆகவே  இன்நிலை மாற வேண்டும். நீங்கள் கடும் வெயிலிலும் கடும் குளிரிலும் உழைத்த பணத்தில் ஒரு ரூபாவேனும்  வீண்விரையம் செய்வதை நான் விரும்பவில்லை. தற்பொழுது என்னிடம் உரிய தரவுகளும் வாழ்வாதார ஊக்குவிப்பு திட்டங்களும் இருக்கின்றன. என்ன வகையான வேலைத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவை என்பதை என்னால் மதிப்பீடு செய்ய முடியும் ஒவ்வொரு பயனாளிக்குமான மதிப்பீட்டோடு அவர்களின் கணக்கு விபரங்களை நிலையான கட்டளை விபரத்தோடு தங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
அவ்வாறு தங்களால் நிதி உதவி செய்யப்படுகின்றபொழுது, குறித்த நிதி அனைத்தும் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடையும். அத்தோடு குறித்த பயனாளிக்கு என்ன தொழிலை செய்வதற்கு தங்களிடம் சிபாரிசு செய்கின்றேனோ, அந்த தொழிலுக்கான உள்ளீடுகளையும், அந்த தொழிலினால் குறித்த நபர் ஒரு நிலையான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான கட்டுப்பாடுகளும், மேற்ப்பார்வையும் தொடர்ச்சியான பின்னடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு என்னால் முடியும்.
ஆகவே எனது அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே ” சிந்தித்து செயற்ப்படுங்கள், செயற்ப்படுத்த நான் தயார்”
SHARE