புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்- கஜேந்திரகுமார்

496

 

முள்ளிவாய்க்காலில் போர்முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் நாள் (21.05.2009) இந்திய அதிகாரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது “தமிழர்களுக்கு 13ஆம் திருத்தம்தான் தீர்வு அதற்குமேல் ஒரு அங்குலம் கூட நகராது. இலங்கை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை கொடுக்க வேண்டும் என்று இந்தியா தான் தீர்மானிக்கும்” என்று நேரடியாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கட்சியினுள் இந்தியாவின் முடிவை எதிர்ப்பது என்று முடிவெடுக்கவேண்டும் என்று தலைமையுடன் தொடர்ந்து போராடினோம் ஆனால் அதற்கு திரு சம்பந்தன்உடன்பட மறுத்துவந்தார். அந்த சூழலில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முதல் வேலையாக விடுதலைப்புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது அதில் நான் தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்கமுடியாது என்று கடுமையாக வாதாடினேன், அதற்கு திரு சம்பந்தன் அவர்கள் “இந்தியா விரும்பாத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” இதற்கு உடன்பட்டால் இருங்கள் இல்லையென்றால் கூட்டமைப்பைவிட்டு வெளியேறுங்கள் என்று நேரடியாக கூறினார்.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(சக்திதொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சி – 21/02/2015)

 

SHARE