புலிகளின் தலைவரை பிடிக்க முயன்றும் தப்பிக் கொண்டார்! இந்திய இராணுவத்தளபதி

342

 

புலிகளின் தலைவரை பிடிக்க முயன்றும் தப்பிக் கொண்டார்! இந்திய இராணுவத்தளபதி

இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்ப 1987ம் ஆண்டு அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்தியாவின் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வி. முட்டாளத்தனமான முடிவு. இவ்வாறு கூறியுள்ளார் இந்திய மத்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான வி.கே.சிங். நிகழ்வொன்றில் பேசும்போதே இவ்வாறு கூறியதாக பி.ரி.ஐ செய்திச்சேவை கூறியுள்ளது.

இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்பும் தீர்மானம் அப்போதைய இந்திய அரசின் கொள்கையில் மிகப்பெரிய தோல்வி. இலங்கை அரசுக்கும் புலிகளிற்குமிடையில் மோதல் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இலங்கையின் போக்கில் விட்டிருந்தால் அவர்கள் புலிகளை ஒடுக்கியிருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்தியாவின் தவறான கொள்கையினால் அமைதிப்படையாக சென்ற இராணுவம் புலிகளுடன் மோதவேண்டியேற்பட்டது.

இந்திய இராணுவம் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க பலமுறை முயன்றது. ஆனால் ஒவ்வொருமுறையும் அவர் பாதுகாப்பாக தப்பிக் கொண்டார் என கூறியுள்ளார்.Prabakaran_indian_army

 

SHARE