புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தனவா?

467

யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதில் பிரபாகரன் இருக்கின்றார் என்ற பிரச்சாரம், இன்னமும் மங்கிவிடவில்லை. அவர் இறந்தும் வாழ்கிறார் என்று ஒரு தரப்புக் கூறும் அதே நேரம், பிரபாகரன் உயிருடன் இல்லை. அப்படியிருந்திருந்தால் அவர் இவ்வாண்டாவது மாவீரர் தின உரையாற்றியிருப்பார், என்பது இவர்களுடைய வாதமாகும். அதே நேரம், உண்மை நிலைப்பாட்டை உற்று நோக்கும்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற பிரபாகரனுடனான இறுதி யுத்தத்தில், நந்திக்கடல் வழியே கவசாக்கி ரக சிறு படகில் தப்பிச் செல்ல முற்பட்டபோது, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார்; என இராணுவத்தினர் தெரிவிக்கும் அதே நேரம், தன்னைத்தானே டொக்காரா பிஸ்டலினால் தலையில் வெடிவைவத்துக் கொண்டார் என்றும், பிரபாகரனை விஷவாயு அடித்து பிடித்து கொழும்பிற்குக் கொண்டு வந்து சித்திரவதை செய்த பின்பு தான், முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து கொல்லப்பட்டார் என்று பேசப்படும் அதே நேரம் பிரபாகரனின் கழுத்தில் சைனற் இருக்கவில்லை என்று, 58வது படையணியின் கட்டளைத்தளபதி சுவேந்திர டி சில்வா தெரிவித்திருந்தார்.

அத்தோடு பிரபாகரன், கவசாக்கி ரக சிறிய படகில் நந்திக் கடலைக் கடந்து, நீர்மூழ்கிக் கப்பலுக்கு தப்பிச்செல்லும் வழியிலே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்ற கருத்தினை உற்று நோக்கும்போது, சந்தேகத்தினை வலுப்படுத்தும் பல காரணங்கள் இவற்றுக்குள் அடங்குகின்றன. இவை எவ்வாறாயின்

prabakaran-view prabakaran-with-gun
 நீர்மூழ்கிக்குத் தப்பிச்செல்லும் வேளையில், எது வித பாதுகாப்பும் இன்றி அவர் சென்றிருப்பாரா?
 சண்டை உக்கிரத்தின்போது, முல்லைக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் வந்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள்

அமைந்திருக்குமா? அவ்வாறு ஏற்பாடு செய்திருப்பினும் கூட, கே.பி, பொட்டம்மான், சூசை ஆகியோரினால் தான் இச் செயற்பாட்டினைச் செய்திருக்கமுடியும்.
 பொட்டு அம்மானை விட்டு விட்டு பிரபாகரன், இந்த சிறிய படகில் ஏறிச் சென்றிருப்பாரா? இந்த கவசாக்கிப் படகில்,       ஒருவர் மட்டுமே பயணிக்கமுடியும் என்பதும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
 ஒரு விடுதலைப்போராட்ட வீரன், தப்பிச் செல்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டிருப்பாரா?
 அப்படி தப்பிச் செல்லும் நோக்கம் இருந்திருந்தால், நோர்வே உட்பட 19 நாடுகள் அவரை, தங்களுடைய நாட்டிற்கு வரும்படி, இரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருந்தன, இந் நாடுகளின் பேச்சுக்களை நம்பி பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான முயற்ச்சிகளை எடுத்திருப்பாரா?

thasavatharam_pirapa
 20 வருடங்கள் தனி இராட்ச்சியத்தினைக் கொண்டிருந்த பிரபாகரன், இறுதிக்கட்ட யுத்தத்தில், தனது போராட்ட நிலைகளை விட்டு விட்டு, புஸ் வாண வெடிபோல் மாறியிருப்பாரா?
 இவரைச் சுற்றி நின்ற ஆயிரம் கரும்புலிகள் வெடித்துச்சிதறி, பிரபாகரன் செல்வதற்கு வழிகளை அமைத்துக்கொடுக்க இதனூடாக பிரபாகரன் வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் அமைந்திருந்தனவா?
 தமிழீழத்திற்காகவும், தமிழ் பேசும் மக்களுக்காகவும் போராடிய ஒரு தலைவன், போராட்டத்தை விட்டு விட்டு, வேறோர் நாட்டிற்குத் தப்பிச் செல்வது என்பது, அவரின் தன்மானப் பிரச்சினையாகக் காணப்படுவதால் அவர் அவ்வாறு சென்றிருக்க வாய்ப்புக்கள் அமைத்திருக்குமா?
 சிறு பிள்ளைத்தனமான ஓர் முடிவை புலிகளின் தலைவர் பிரபாகரன் எடுத்திருப்பாரா?
 இறுதிப் போராளி இருக்கும் வரை, எமது போராட்டம் தொடரும் என்று கூறிய பிரபாகரனே, ஏனைய போராளிகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்க வாய்ப்புக்கள் உள்ளனவா?
இவ்வாறான காரணங்கள் ஒரு புறம் இருக்க, மறு புறத்தே டொக்காரா பிஸ்டலினால் தன்னைத்தானே வெடிவைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பதைப் பார்க்கும்போது,
 இவர் தன்னைத்தானே டொக்காரா பிஸ்டலினால் சுட்டுக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பாரா?
 ஒரு அங்குலம் பக்கத்தில் வைத்து பிஸ்டலினால் சுடுவதாயின், அவரின் மூளை நிச்சயம் சிதறியிருக்கும்.
 டொக்காரா பிஸ்டலினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப் பாராக இருந்தால் மூளை சிதறியிருக்கும், அதேவேளை அவரின் முக அமைப்புக்களும் வேறுபட்டிருக்கும்.
 பிஸ்டலினால், நெற்றிப்பொட்டில் அல்லது பக்கத்தலையில் சுட்டிருப்பாராயினும், அவரின் முக அமைப்பு உருக்குலைந்து காணப்பட்டிருக்கும்.

20090226_15
 தொலைக்காட்சியில், பிரபாகரனின் இறந்த உடலைக் காண்பிக்கும் போது, இரு பக்கமும் அவரின் தலை கழன்று அசைகின்றது. இது நடைமுறைச்சாத்தியமாகுமா?
 ஆயுத வல்லுனர்கள் கூறும் கருத்தின்படி டொக்காரா பிஸ்டல் என்பது, அதிநவீன சக்தி வாய்ந்த ஒன்றாகும், இது சுடப்படும்போது, தன்னிச்சையாகப் பதிவு செய்யும் தன்மையுடையது. இதனைக் கூடுதலாக, அமெரிக்கக் கொமாண்டோ உயர் அதிகாரிகள் பாவிப்பார்கள். இந்த டொக்காரா பிஸ்டல் பாலஸ்தீனத் தலைவர் ஜசீர் அரபாத் அவர்களினால், பிரபாகரனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
 பிரபாகரன், சைனற் வில்லைகள் இருக்க, ஏன் இந்த டொக்காரா பிஸ்டலினால் தற்கொலை செய்திருக்கவேண்டும்?
 அவர் இறக்கும்போது, அல்லது இறந்ததாகக் கருதப்படும்போது, அவரின் முகம், முடிகளின்றி பளிச்சென்று இருந்தது. இந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் முகத்தினைச் சவரம் செய்து பளிச்சென்று வைத்திருக்க முடியுமா?
 இந்த டொக்காரா பிஸ்டலினால் தலையில், வெடிவைத்திருந்தாலும் கூட, அவர் முகத்தில் சீறு கீறல்கள், காயங்கள் இல்லாதிருந்திருக்குமா?
 அவர் சிறு ரகப் படகில், நந்திக்கடல் வழியே தப்பிச்சென்றிருப்பாராக இருந்தால், தற்கொலை செய்யும் எண்ணம் அவருக்கு இருந்திருக்குமா?
இவை ஒரு புறமிருக்க, விஷவாயு அடிக்கப்பட்டு, பின்னர் உயிருடன் பிடிக்கப்பட்டு, கொழும்பிற்குக் கொண்டு சென்று, சித்திரவதை செய்த பின்னரே கோடாரியினால், மண்டையைப் பிளந்து இராணுவம் கொண்றார்கள் என்று கூறப்படுகின்றது. இதனுடைய உண்மைத்தன்மையைப் பார்க்கும்போது.
 விஷவாயு அடித்துப் பிடிக்கப்பட்ட பிரபாகரனை, இந்தியா கேட்டிருந்த அதே நேரம், ஏன் அவரை இலங்கை அரசு ஒப்படைக்கவில்லை?
 விஷவாயு அடித்து பிரபாகரன் பிடிக்கப்பட்டாராக இருந்தால் அவரின் சைனற் வில்லை, ஆயுதம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கும். ஆகவே சைனற் வில்லை உட்கொண்டு இறந்திருக்க வாய்ப்பில்லை.
 இவரை கொழும்பிற்குக் கொண்டு வந்திருப்பார்களாக இருந்தால், நிச்சயம் இலங்கை அரசு ஒரு ஊர்வலமே நடத்தியிருக்கும் அல்லது பொது மக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும்?
 நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என ஊடகங்களில் 18-05-2009 ஆம் திகதியில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறாயின், அவர் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்க முடியாது.
 விஷவாயுவைத் தாக்குப்பிடிக்கும் முகமூடிகள் புலிகளிடம் நிறையவே இருந்தன. இதனைப் பிரபாகரன் அணிந்திருக்கமாட்டாரா, அல்லது அணிய மறந்து விட்டாரா?
 பிரபாகரனும் விஷவாயுக் குண்டுகளை வைத்திருந்தார். ஆனால் இதை ஏன் அவர் இராணுவத்தினர் மீது இறுதிக்கட்டத்தில் பயன்படுத்தவில்லை?
 இந்த விஷவாயு அடிக்கப்பட்டு, மயக்கநிலையில் பிரபாகரன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டாராயின், அவருடன் கூடவே இருந்த பொட்டம்மான், சூசை போன்ற தளபதிகளின் உடல்கள் எங்கே? இதில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் 1994ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி தாக்குதலில் பிரபாகரன், பொட்டு அம்மான், நவரெட்ணம், ஆகிய மூவருக்கும், 600 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதில் தலா ஒருவருக்கு 200 வருடங்கள் என, உயர் நீதிமன்றத்தினால் தீர்;ப்பளிக்கப்பட்டது. இதில் பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தவிர நவரெட்ணம் என்பவருக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கி தற்பொழுது, கண்டி போகம்பரச் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதொன்றாகும். இந்த நவரெட்ணம் என்பவர், வவுனியா தடுப்பு முகாமில், தாடியுடன் இருந்தபோது காட்டிக்கொடுக்கப்பட்டு, இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

11_06_08_mnr_06_69201_445
 அவ்வாறு விஷவாயு அடிக்கப்பட்டு பிரபாகரன் உயிருடன் பிடிபட்டார் எனின், ஏன் பிரபாகரனுக்கு 200 வருடச்சிறைத் தண்டனை வழங்க இலங்கை அரசு முன்வரவில்லை.
 விஷவாயு அடித்துப்பிக்கப்பட்டார் என்று கூறப்படுமாயின், அவர் சதாம் உசைன் போன்று, தனது சுய நினைவை இழந்து, இரு கரங்களையும் உயர்த்தி, சரணடையும் ஓர் நிலமை ஏற்ப்பட்டிருக்காது.
 விஷவாயு அடித்து பிடிக்கப்பட்டு, கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பிரபாகரன், துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்படும் சம்பவங்கள், கமராவில் பதிவு செய்யப்பட்டு, இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் இவை போலியென அடையாளம் காணப்பட்டது. இவ்வாறான ஒரு ஒளிப்பதிவு நாடாவை கணனியின் நவீன் உதவியுடன், அவரின் தலையை வைத்து இயக்கமுடியும் என, இலங்கை அரசு ஜெனிவாவில் நிருபித்துக்காட்டியது, அதாவது சணல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட இறுதிக்கட்ட யுத்தச் சம்பவங்கள் தொடர்பாக, போலியென சுவேந்திர டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 30 காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு, பிரபாகரன் தப்பிச் சென்றிருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்குமா? அப்படி அவர் தப்பிச் சென்றிருப்பாராயின், அவர் எந்த நாட்டில் இருப்பார்? இவ்வளவு காலத்திற்கும் பிரபாகரன் தங்கியிருப்பதற்கு அந்நாடுகள், உதவி வழங்கிக் கொண்டிருக்குமா? இவை அனைத்தும் சந்தேகங்களை ஏற்படுத்தும் காரணங்களாகவே மக்கள் மனதில் இன்னமும் நிலை கொண்டுள்ளன. அதே நேரம், 10 வருடங்கள் சென்றாலும் பிரபாகரன் வருவார், மாவீரர் தின உரையாற்றுவார் என்று சொல்லிக்கொள்ளும் மக்களும் இல்லாமலில்லை.

leader-prabakaran-2
எனினும் இன்னுமொரு யுத்தம் ஒன்றை மக்கள் நிச்சயம் எதிர்பாக்கவில்லை. மாறாக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு, அரசு உரியமுறை யில் பதில் சொல்லவேண்டும் என்று இன்னும் ஜெனிவாவில், மக்கள் குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு இலங்கை அரசு என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும் இவை ஒரு புறமிருக்க, அப்படிப் பிரபாகரன் தப்பிச் சென்று இன்னும் ஓர் நாட்டிலிருந்து கொண்டு தமது படைப்பலத்தை ஏற்படுத்துவதென்பது ஓர் சாத்தியமற்ற விடயமாகும். அன்று ஆயுதப் போராட்டங்களுக்கு உதவி வழங்கிய இந்தியாவே, இறுதியில் புலிகளுக்கு எதிரியாக மாறினார்கள். இலங்கை வரலாற்றில் 30 வருடங்கள் போராடிய பிரபாகரன் தப்பிச் சென்று உயிருடன் இருக்கிறார். அவர் மீண்டும் வந்து இலங்கையில் போர்கொடி தூக்குவார் என்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சில அரசியல் தலைவர்கள் சுயலாப அரசியல் நடத்துகின்றார்கள். இத்தோடு பிரபாகரனை இலங்கை அரசு சுட்டுக்கொண்டு விட்டதா? அல்லது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுவிட்டாரா?அல்லது விஷவாயு அடித்துப் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்பது தொடர்பில் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் முடிவுகளை எடுத்து, எந்த வகையிலும் மீண்டும் ஒரு இரத்தம் சிந்துவதற்கான வழி முறைகளை ஏற்படுத்தாது மஹிந்த அரசாங்கத்திடம் தமிழ் பேசும் மக்களுக்குரிய உரிமைகளைப் பாராளுமன்றத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்வதனூடாக, தமிழ்பேசும் மக்களுக்கு நிம்மதியும், சுதந்திரமும் உடைய வாழ்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும். 30 வருடங்கள் போராடிய பிரபாகரன், மறைந்து விட்டாரோ? அல்லது மடிந்துவிட்டாரோ? பிரபாகரனின், தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டத்தினை மக்கள் புரட்சி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தான் உண்மை. மீண்டும் ஒரு முறை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலமை ஏற்பட்டால், இலங்கையில் பாரிய இரத்த ஆறு ஓடும் என்பதில் எவ்வித சந்தேசமும் இல்லை.
-நெற்றிப்பொறியன்-

SHARE