புலிகளின் தலைவர் பிரபாகரன் கையில் இஸ்ரேல் – அமெரிக்காவின் கழுகு பிஸ்ரல்.

500

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி தொடர்பான சர்ச்சையொன்று அண்மையில் எழுந்திருந்தது. இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் இறந்த உடலை மீட்டதாக கூறி ,அரசு ஒரு உடலை காட்டியது.

07-1433655668-prabahakaran-600

ஆனால் துப்பாக்கி விடயத்தில் மூச்சும் விடவில்லை. கரணம் கவச குண்டலமும் மாதிரி, பிரபாகரனும் கைத் துப்பாக்கியும் இணைபிரியாதவை. துப்பாக்கி இல்லாமல் பிரபாகரன் உடல் மீட்டதாக கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய அரசின் மோசடிகளை மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய அரசு, துப்பாக்கி விடயத்திலும் கவனம் செலுத்தியது. கைப்பற்றப்பட்ட துப்பாகி எங்கே என்ற கேள்வி எழுந்தது,

பிரபாகரனின் Glock வகை கைத்துப்பாக்கி, தகடு, அடையாள அட்டையென்பவற்றை தாங்கள் கண்களாலேயே காணவில்லையென இராணுவம் அவசரஅவசரமாக அறிக்கையொன்றை வெளியிட்டு தற்காலிகமாக தப்பித்து கொண்டுள்ளது.

பிரபாகரனின் Glock வகை துப்பாக்கி பற்றியே அந்த சமயத்தில் ஊடகங்களெல்லாம் பேசின.

கைத்துப்பாக்கிகளின் அரசன் என குளக் ரக கைத்துப்பாக்கிகளை சொல்கிறார்கள்.

அவ்வளவு துல்லியம் மற்றும் சக்தி மிக்கவை அவை. கருங்கல்லை கூட அந்த துப்பாக்கி ரவை துளைக்குமென கூறப்பட்டது.

இதனால்த்தான் பிரபாகரனிற்கும் இந்த துப்பாக்கிகளில் ஈடுபாடு ஏற்பட்டு அதனை வாங்கினார் என கூறப்படுகிறது. அத்துடன், தனது தளபதிகள் அனைவரிற்கும் அந்த வகை கைத்துப்பாக்கிகளையே அணிய வைத்து அழகு பார்த்தார்.

விடுதலைப் புலிகளின் தளபதிகள் அனைவருமே குளக் ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருக்க, ஒரேயொரு மூத்ததளபதி மட்டுமே அதனை தன்னுடன் வைத்திருக்கவில்லை.

Prabakaran7_2

அவர்தான் பிரிகேடியர் ஆதவன் எனப்பட்ட கடாபி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த துல்லியமான சூட்டாளராக அவர் அணிந்திருந்தது மிக பழைய மொடல் பிஸ்ரல். இதனை “கழுகு பிஸ்ரல்” என்றே போராளிகள் அழைத்தனர்.

இந்த துப்பாக்கியை அவர் கைவிடாமல் வைத்திருந்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. வடமராட்சியை சேர்ந்த கடாபிதான் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலராக மிக நீண்டகாலம் பணியாற்றியவர்.

அந்த சமயத்தில் பிரபாகரன் வைத்திருந்தது கழுகு பிஸ்ரல். இஸ்ரேல் இராணுவத் துறையின் வடிவமைப்பில் அமெரிக்கா தயாரித்த இந்த கைத்துப்பாக்கிகள் அதிக நிறையுடையவை.

மற்றும் சுடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்துவது, இதனது தோற்றம் மற்றும் சத்தத்தினாலேயே ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.

இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்ட சமயத்தில் இதுதான் கைததுப்பாக்கி உலகில் முன்னணியிலிருந்தது. பிரபாகரனின் பிரியத்திற்குரியமாகவே இந்த துப்பாக்கி விளங்கியது.

ஒருசமயத்தில் அதனையே கடாபியிடம் அன்பளிப்பாக கொடுத்தார். தனது இறுதி மூச்சுவரை கழுகு பிஸ்ரலுடனேயெ கடாபி வாழ்ந்தார்.

குளக் பிஸ்ரலின் வரவிற்கு பின்னர் அனைத்து தளபதிகளும் அதற்கு மாறினார்கள். கடாபிக்கும் அது வழங்கப்பட்டது. எனினும், அவர் தலைவர் அன்பளித்த துப்பாக்கியை கடந்து செல்லவில்லை.

உண்மையை சொன்னால் பிரபாகரனிற்கு கருங்கல்லை துளைக்கும் பிஸ்ரல் மட்டுமல்ல, கழுகு பிஸ்ரலும் பிரியமாகத்தான் இருந்தது என்றால் அது மிகையாகாது.Ltte-Ledr

 

SHARE