புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரதுசகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் எவரையும் கைது செய்வோம்.

474

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில்  (16.05.14) அன்று  இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரதுசகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் பொதுஇடத்தில் நினைவுகூரமுடியாது மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் எவரையும் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன என்பவர் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்தினிலேயே வடமாகாணசபையில் நடைபெற்ற நினைவேநதல் நிகழ்வு பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம்; பகுதியினைச்சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆயினும் தனக்கும் மேற்படி துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் யாரோ வீட்டிற்கு வந்து எறிந்துவிட்டுச் சென்றதினையே தான் எடுத்து வைத்திருந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

SHARE