புலிகளின் பணம், கப்பல்கள், வர்த்தக நிலையங்கள், வெளிநாடுகளில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் என புலிகளின் சகல விடயங்களையும் அறிந்த கே.பி அரசாங்கத்தில் மடியில் அமர்ந்துள்ளார்

345

SRI_LANKA_GENERAL_RE_13709f

கே.பியை பாதுகாத்து கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச ரீதியாக சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளின் பணத்தை கண்டுபிடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளது.புலிகளின் பணத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் கூறும் கதையை நாம் நம்ப தயாரில்லை.போர் நடைபெற்ற போது, புலிகளுக்கு சொந்தமான 220 கிலோ கிராம் தங்கத்தை தனது இரண்டு கைகளால் பொலிஸாரிடம் கொடுத்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இன்று அதை பற்றி எவரும் பேசுவதில்லை. அது நாட்டின் சொத்து. புலிகளிடம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பணம் எமது சொத்து. அது நாட்டுக்கு சொந்தமானது. நாட்டு மக்களுக்கு சொந்தமானது.அந்த பணத்தில் ஒவ்வொரு சதத்தையும் நாட்டின் அபிவிருத்திக்காக மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பெற முடியாது போனால் நாங்கள் சர்வதேச உதவியுடன் அந்த பணத்தை கண்டுபிடிப்பை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட மங்கள சமரவீர இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை வரவழைத்து அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மறுபுறம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் தன்னை சர்வதேச தலைவராக அறிவித்த கே.பி.அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கோத்தபாய ராஜபக்ஷ, கே.பியை நேருக்கு நேர் சந்தித்தால் முத்தமிட்டு வரவேற்பார். விடுதலைப் புலிகளின் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எவரும் இல்லாததால், அந்த அமைப்பின் குற்றங்கள் குறித்து சர்வதேசத்திற்கு சென்று பேசி பயனில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.ஏன் எவருமில்லை. புலிகளின் சகல இரகசியங்களை அறிந்த கே.பி இருக்கின்றார்.

புலிகளின் பணம், கப்பல்கள், வர்த்தக நிலையங்கள், வெளிநாடுகளில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் என புலிகளின் சகல விடயங்களையும் அறிந்த கே.பி அரசாங்கத்தில் மடியில் அமர்ந்துள்ளார். இதுதான் இரகசியம். இந்த இரகசியம் காரணமாகவே கே.பியை உயிர் போல் பாதுகாக்கும் அரசாங்கம் மறுபுறம் இராணுவத்தை காட்டிக் கொடுக்க முயற்சித்து வருகிறது. கே.பியிடம் இருக்கும் பணத்தை பாதுகாக்கவே இவர்கள் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து விரிவாக நான் பேச போவதில்லை. கே.பியிடம் இருக்கும் புலிகளின் பணம் பற்றி தகவல்களை வெளியிட தனியான செய்தியாளர் சந்திப்பை நடத்த எண்ணியுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். 

Untitled

SHARE