புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம்:

598

images (4)

புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம்:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பும் அமைச்சும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கத்தினால் அண்மையில் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் உண்டான தொடர்பு குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் உள்ள ராஜதந்திரிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.

உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளிக்க உள்ளனர்.

SHARE