புலிகளை புகழும் சங்கரி….

125

தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் அனுமதிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

tulf

தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களது கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்க மறுத்துள்ளதாகவும், தமது கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்களின் ஒரே எதிரியாக மாறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன்இணைந்து செயற்பட விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்படுவதாக சாதாரண பொதுமக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடுகளை மூடி மறைக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE