புலிகள் மீண்டும் உருவாகுவார்களா?

223

 

புலிகள் மீண்டும் உருவாகுவார்களா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உயிர்ப்பு தொடர்பில் இன்று (24) பாராளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய பதில் அளித்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா விடுதலைப் புலிகள் எழுச்சி குறித்து அமெரிக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்பினார்.

குறித்த அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளித்தார்.

இருவருக்கு இடையிலான கேள்வி பதில் வருமாறு

கேள்வி -: எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சிலவா:-

´விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலயமைப்பு வலுவாக இயங்கி வருவதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அறிக்கை ஒன்று கூறுகிறது. புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் சர்வதேச அளவில் வலுவடைந்துள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் பயங்காரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்துள்ளதா? புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதை தடுக்க இலங்கை அரசாங்கம் தேசிய சர்வதேச அளவில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?´

பதில் -: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

´இந்த அறிக்கை கடந்த வாரம் வெளிவந்தாலும் 2014ம் ஆண்டுக்கே அது உரியதாகும். தற்போதைய எதிர்கட்சித் தலைவர்கூட அமைச்சரவையில் இருந்த வருடத்தில் உலக பயங்கரவாதம் தொடர்பில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வாறான அறிக்கை 2012 , 2013 போன்று வருடங்களிலும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் யுத்த ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்தாலும் பயங்காரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அவர்கள் மேற்கொண்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்ததாக இந்த அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE