புலி படத்துக்காக செய்த விஜய்… 

687

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு தலகோணத்தில் அதிரவைக்கும் செட் ஒன்றை போட்டு மிக வேகமாக வளர்ந்து வருகிறது .

இப்படப்பிடிப்பு இந்த வாரத்துக்குள் முடிந்து விடும். மேலும் பாடல் காட்சிக்காக அடுத்த வாரம் கம்போடியா போக உள்ளது படக்குழு.

puli.jpg11

இந்நிலையில் விஜய் எந்த படத்திலும் செய்யாத விஷயத்தை புலி படத்துக்காக செய்துள்ளார் . அதாவது தனது திரையுலக வாழ்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதே கிடையாது, ஆனால் புலி படத்துக்காக ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 3 வாரங்கள் படப்பிடிப்பு கலந்து கொண்டு உள்ளாராம்.

விஜய்யின் இந்த ஈடுபாட்டையும் மற்றும் உழைப்பையும் கண்டு புலி படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

 

SHARE