புலி Android Game விரைவில் ரிலீஸ்

186

விஜய் நடித்த புலி படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஆண்ட்ராய்டு கேம்( Android Game) விரைவில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

ஸ்கை சினிமாஸ் நிறுவனம் ‘புலி’ ஆண்ட்ராய்டு கேமை வடிவமைத்து வருவதாகவும், விரைவில் இந்த கேம் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இதே நிறுவனம் கத்தி, கப்பார், க்ளீன் இந்தியா ஆகிய ஆண்ட்ராய்டு கேம்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இவற்றில் க்ளீன் இந்தியா கேம் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடதக்கது.

vijay-58-puli-stills

SHARE