பூஜை படத்தில் ஆன்ட்ரியா

920

விஷால் தற்போது ஹரியின் இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கும் படம் தான் “பூஜை”.

தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆன்ட்ரியா, தற்போது விஷால் நடிக்கும் பூஜை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருக்கிறார்.

சமீபத்தில் தான் பூஜை படத்தின் சண்டை காட்சிகளுக்காக ஒரு பிரம்மாண்டமான மார்க்கெட் செட் போடப்பட்டிருந்தது.

இப்போது அதே மார்க்கெட் செட்டில் தான் ஆன்ட்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம்.

விஷாலின் அறிமுக பாடலில் தான் ஆன்ட்ரியா பெப்பியாக நடனம் ஆட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE