நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்தில் ஏற்பட்ட தீயால் இரண்டு பொருட் களஞ்சியங்கள் முற்றாக தீக்கு இறையாகி பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளன.
இன்று (21.07.2017) காலை 8.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பம் நடைபெற்ற கணப்பொழுதில் பூண்டுலோயா அரச பஸ் டிப்போ ஊழியர்கள்¸ பொது மக்கள் ஆகியோர் பூண்டுலோயா பொலிஸாருடன் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அதே நேரம் தீ வேறு கடைகளுக்கு செல்லாமல் இருக்க டோசர் உதவியுடன் தீ பரவுவதை தடுத்துள்ளனர்.








இந்த தீ விபத்து தொட்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸ் சிரேஷ்ட பரிசோதகர் நிசாந்த சுரவீர தலைமையிலான குழு மேற்க் கொண்டு வருகின்றார். பூண்டுலோயா நகரத்தில் இவ்வாறு அடிக்கடி தீ வீபத்து ஏற்பட்டு வருகின்றது. இந்த தீயை அணைக்க நுவரெலியாவில் இருந்து தீ அணைக்கும் வாகனம் வந்த பொழுதும் தீயை மக்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
பா.திருஞானம்