ஈரமான ரோஜாவே தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான படம், இதில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் மோகினி.
அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான நாடோடி பாட்டுக்காரன் திரைப்படம் வெளியாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியது.
அதன் பிறகு உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், தாய்மொழி, நான் பேச நினைப்பதெல்லாம், கண்மணி, வனஜா கிரிஜா, பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எ கலக்கிய இவர் 1999ம் ஆண்டு வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
மோகினி குடும்பம்
சமீபத்தில் மோகினி தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட நம்ம நடிகை மோகினியா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள நடிகை மோகினி தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார்.