பூமிக்கு வந்த வேற்றுக்கிரகவாசி!…

338

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான கதைகள் இதுவரை நிரூபிக்கபடவில்லை என்றாலும், அவைகள் எப்போதும் ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவே இருக்கின்றன.

வேற்றுக்கிரக வாசிகள் உண்மையில் இருந்தாலும், அவர்கள் பூமிக்கு வந்துள்ளார்களா என்ற கேள்விக்கும் இதுவரை உறுதியான பதில் இல்லை.

ஆனால் பல ஆண்டுகளாகவே ஏலியன் (Alien) என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு பலவிதமான வாகனங்களில் வந்து செல்வதாக பல கதைகள் வெளிவந்தவாறு உள்ளது.

இந்நிலையில், இந்த கதைகளுக்கு வலு சேர்க்கும் சம்பவம் ஒன்றினை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

சிலியில் கடந்த 2003ம் ஆண்டு Oscar Munoz, என்பவர் Atacama Desert என்ற இடத்தில் ஒரு வினோத தோற்றத்தில் ஒரு எலும்பு கூடை கைப்பற்றியுள்ளார்.

ஒரு தடை செய்யப்பட்ட தேவாலயத்தின் அருகே ஒரு வெள்ளை துணியால் சுற்றப்பட்டு அந்த எலும்பு கூடு கிடைத்ததாக Munoz தெரிவித்துள்ளார்.

சுமார் 6 இஞ்ச் உயரம் மட்டுமே இருந்த அந்த எலும்புக் கூடு, சற்று பெரிய தலையுடன் மனித ரூபத்திலேயே இருந்தது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த எலும்புக் கூடு பற்றி பல கதைகள் வெளிவர தொடங்கியது.

அது ஒரு கலைக்கப்பட்ட கரு என்றும், ஒரு சிறிய குரங்கின் எலும்பு கூடு என்றும், அல்லது பூமிக்கு பாதை மாறி வந்த வேற்றுக்கிரகவாசி என்றும் கதைகள் கூறப்பட்டன.

Atacama humanoid என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட அந்த எலும்புக்கூடு பற்றி Stanford பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில், வெறும் 15 சென்டிமீற்றர் மட்டுமே உயரத்தை கொண்ட அந்த எலும்பு கூடு, உடம்பை விட பெரிய தலையினை கொண்டு விளங்கியதாகவும், அதன் பற்கள் மிகவும் கூர்மையாக இருந்தது என்றும் கூறினர்.

மேலும் அதில் மனிதர்களை போல் அல்லாமல் 9 விலா எலும்புகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த எலும்பு கூடு பற்றிய உண்மை ரகசியமாகவே திகழ்ந்ததாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

a3 aa aa1

இதுபற்றி அவர்கள் எடுத்த Sirius என்ற ஆவண படத்தில், அனைத்தையும் முறையாக பதிவு செய்துள்ளனர்.

நிபுணர் ஒருவர் சோதனை முறைகளை பற்றி கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு நாங்கள் அந்த எலும்பு கூட்டின் மாதிரிகளை கொண்டு வந்தோம்.

அதனை X Rays, CAT scans என சோதனைக்குட்படுத்திய போதும், அந்த எலும்பினை முறையாக பிரித்து பார்த்தபோது அவற்றில் எலும்பு மஜ்ஜை பொருட்கள் முறையாக அமைந்திருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு ஆய்வின் முடிவில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த எலும்புக்கூடு ‘interesting mutation’ எனப்படும் சுவாரஸ்யமான மரபணு திடீர் மாற்றத்தின் விளைவாக தோன்றியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மேலும், இது ஒரு ஆண் என்று கூறிய அவர்கள், இந்த உயிரினம் பிறந்து 6 முதல் 8 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என்று கூறி ஆச்சர்யத்தை தூண்டினர்.

ஸ்டெம் செல் உயிரியல் இயக்குனர் Garry Nolan என்பவர் கூறுகையில், இது கண்டிப்பாக குரங்கு இல்லை. இது மனிதன் அல்லது மனிதனுக்கு தொடர்புடைய சிம்பன்ஸி வகை குரங்காக இருக்கலாம்.

அது 6 முதல் 8 வயது வரை வாழ்ந்துள்ளது. அது சுவாசித்துள்ளது, உணவருந்தியுள்ளது. இந்த வினோத உயிரினம் பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்பது தான் தனக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆய்வு படத்தின் முடிவில், அந்த எலும்பு கூட்டில், மனிதனின் DNA உள்ளதாக தெரியவந்துள்ளதாக Garry Nolan தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Sirius என்ற அந்த ஆய்வு படம், 2013ம் ஆண்டு புவி நாளான ஏப்ரல் 22ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டுள்ளது.

 

 

 

 

SHARE