பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சகவீரர் மன்தீப்சிங்க்கு அளித்துள்ளார்.

321
பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சகவீரர் மன்தீப்சிங்க்கு அளித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழந்து தவித்த போது, ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ்– மன்தீப்சிங் அதிரடியாக விளையாடினர்.இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி 113 ஓட்டங்கள் சேர்த்தனர். இதனால் பெங்களூர் அணி 180 ஓட்டங்கள் குவித்து ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

டிவில்லியர்ஸ் 66 ஓட்டங்களும் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), மன்தீப்சிங் 54 ஓட்டங்களும் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இதில் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அந்த விருதை அவர் மன்தீப்சிங்குக்கு வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2 இன்னிங்சில் சரியாக விளையாடவில்லை. எப்படி 180 ஓட்டங்கள் வந்தது என்று தெரியவில்லை

இந்தப் போட்டியில் மன்தீப் சிங் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்டநாயகன் விருதுக்கு அவருக்கு உரியது. அடுத்து சென்னையை எதிர்கொள்கிறோம்.

சென்னை அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

SHARE