பெண்களை குறிவைக்கும் யாழ்ப்பாண போலிசாமிகள்….

138
இதுவரை திரைப்படங்களிலும், செய்திகளிலும் மட்டும் பார்த்து, கேட்டறிந்திருந்த போலிச்சாமியார்கள் எப்படியிருப்பார்கள்? இவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்?
Ja_Wumain_001
அவர்களின் லீலைகள் என்ன? இவையெல்லாம் பெரும் அதிர்ச்சி தரும் செய்திகள். இந்தவகை சாமியார்கள் உங்கள் காலடிகளிலும், உங்கள் ஒவ்வொருவரின் ஊர்களிலும் உள்ளார்கள் என்பதும்தான் இன்னும் அதிர்ச்சியளிக்கும் விடயம்..

இந்தவகை போலிச்சாமியார்கள் யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டியெல்லாம் நிறைந்திருக்கிறார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தது. என்ன.. சிலர் நல்ல பெர்போமென்ஸ்சை வெளிப்படுத்தி ‘நல்ல’படியாக வாழ்கிறார்கள். சிலர் ஏதோ தம்மால் முடிந்தது இவ்வளவுதான் என சிறியளவில் வாழ்கிறார்கள்.

இந்தவகை போலிச்சாமியார்கள் எல்லோரது தாரக மந்திரமும் இரண்டுதான். ஒன்று பொன். மற்றது பெண்.

பொன்னிற்காக.. அதுதான் பணம்… இந்த தொழிலில் நுழைந்தவர்கள் கிடைத்தவரை லாபம் என தங்களிடம் வரும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கொக்கி போட்டு பார்க்கிறார்கள். சாமியாரின் கிருபையில் பெண்கள் மயங்கினால் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். இல்லையென்றால் ஊரறிந்த சங்கதி.

யாழ்ப்பாணத்தில் கொடிகட்டி பறக்கும் போலிச்சாமியார்கள் யார்.. அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்… இவற்றையெல்லாம் அறிய ஒரு ரவுண்ட் அப் புறப்பட்டது தீபத்தின் செய்தியாளர் குழுவொன்று. இதில் அதிர்ச்சிதரும் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

யாழ்ப்பானத்தின் பிரபல பக்கிரி சாமியார் இருப்பது வட்டுக்கோட்டைக்கு அண்மையிலுள்ள கிராமமொன்றில். நான் பொலிஸ் இல்லடா.. பொறுக்கி என விக்ரம் சினிமாவில் பகிரங்க ஸ்டேட்மென்ட் விட்ட மாதிரி இவரும் ஊருக்குள் பகிரங்க ஸ்டேட்மென்ட் பல விடுகிறார் ‘நான் சாமியார்தான்.

ஆனால் கெட்ட சாமியார்’ என கூறுபவர் மது,மாதுவுடன் வாழ்க்கையை சந்தோசமாக கொண்டு நடத்துகிறார். நாட்டுச்சரக்கடித்தால்த்தான் தனக்கு உருவேறும் எனகூறும் சாமியார், முறைப்படி அவற்றையெல்லாம் முடித்துவிட்டு, மப்பும்மந்தாரமுமாகத்தான் தன் மந்திரதந்திரங்களை ஆரம்பிக்கிறார்.

இதற்குள் கன்னாபின்னா தத்தவங்கள் வேறு. ‘உப்பு தின்டவன் தண்ணி குடிச்சாகணும்’ (நமது அரசியல் தலைவரொருவரும் அதை அடிக்கடி சொல்வாரே.. அவரா இவர் என தலையை பிய்க்காதீர்கள். அவர் இவரில்லை!)

‘வாழையில இருந்தால்த்தான் அது வாழக்காய்.. கத்திரியில இருந்தால் கத்தரிக்காய்’ என யாருக்கும் எதுவும் புரியாமல் பேசி தலையை சுற்றவைத்துக் கொண்டிருப்பார்.

அவரை அந்த கிராமம் மட்டுமல்ல, சுற்றயல் கிராமங்கள் எல்லாம் தலையில் வைத்து கொண்டாடுகின்றன.

அவரது வீட்டில் நரசிங்க வைரவர் ஆலயமொன்றுமுள்ளது. ‘வைரவரும் மச்சசாமி… நானும் மச்சசாமி’ என கூறும் சாமியர் செய்யும் மச்ச வேலைகள் சொல்லியடங்காது. சாமி இதுவரை மூன்று திருமணம் செய்துள்ளதாம்.

இபபொழுது திருமணம் செய்துள்ளவருக்கும் சாமிக்குமிடையில் உள்ள வயது வித்தியாசம் தெரியுமா?… நம்புங்கள் 22.

போயோட்டவோ.. பிசாசோட்டவோ என அந்த பிள்ளையை சாமியிடம் பெற்றோர் அழைத்து சென்றிருக்கிறார்கள். அவர் அந்த பிள்ளையையே ஓட்டிக் கொண்டு போய்விட்டார்.

அந்த சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் சிறிது முறுகினார்களாம். அப்பொழுது வீட்டிலிருந்து சாமி ஒரு வார்த்தை சொன்னதாம்… ‘எனக்கு தீங்கு செய்ய நினைச்சபடி என்ர வளவுக்குள்ள காலடியெடுத்து வைக்கிறவனின்ர குடும்பத்தில இருந்து நரசிங்கர் கணக்கு தீர்ப்பார்’.

அடுத்தடுத்த நாட்களில் சாமியை வெட்டுகிறோம் என பெண்ணின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். சாமியின் ஊர்க்காரர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். அடுத்த அடுத்த வாரத்தில் வந்த இளைஞர்களில் மூவரை இராணுவம் பிடித்ததாம்.

நவக்கிரி, புத்தூர் பகுதியில் வைத்து இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்களும் கடத்தப்பட்டனர். இது நடந்தது 2007 தொடக்கத்தில்.

இதன்பின்னர் சாமியாரில் எல்லோருக்கும் நிறைய பயம் என்கிறார்கள் ஊரவர்கள்.

சாமியார் தற்போது கட்டு சொல்கிறார்… தாயத்து கட்டுகிறார்.. மந்திரித்து விடுகிறார்.. வசியம் செய்கிறார்.. பேயோட்டுகிறார்.

சாமியாரிடம் வரும் பெண்கள் தப்பிப்பிழைத்து போவதே பெரும்பாடு என்கிறார்கள் விடயமறிந்த வட்டாரங்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் சாமியார் ஆலயத்தில் திரிசனம் கொடுப்பார். அங்கு வரும் அழகிய பெண்களை, ஏதாவது காரணம் சொல்லி மறுநாள் வரச் சொல்வாராம்.

சாமியாரின் லீலைகள் பற்றி பேசப்பேச மயக்கம்வருமளவிற்கு தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது.

ஊர்மக்கள் ஏன் இதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

ஒரு பெரிசு சொன்னார்- ‘தம்பி சாமியில நல்ல சாமியும் இருக்கு.. குழப்படி சாமியுமிருக்கு. இப்ப பாருங்க முருகனும் சாமிதான்.. வைரவரும் சாமிதான். பிள்ளையாரும் சாமிதான். மூன்றுபேருமே வேறவேற மாதிரி வாழந்தாங்க. அவர் இருந்த மாதிரி இவரில்லை. இவர் மாதிரி அவரில்லை. அதுமாதிரித்தான் எங்கட சாமியும்”

அந்த பகுதிக்கு பொறுப்பான சமூகசேவைகள் உத்தியோகத்தருடனும் பேசக்கிடைத்தது. அவர் இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘இந்த சாமியாரை பற்றி சில முறைப்பாடுகள் சொல்லப்படுகிறதுதான். பிரதேசசெயலாளர் வரை அது தெரியும்.

ஆனால் யாரும் ஆதாரத்துடன் முறையிடவில்லை. மற்றது, இதில் தலையிட நாங்களும் விரும்பவில்லை. அவர் பில்லி,சூனியமெல்லாம் செய்யிற ஆள்’ என்றார்.

சாமியாரிற்கெதிராக ஆதாரமெதுவுமில்லாமலா இவ்வளவு குற்றச்சாட்டுக்களும் கிளப்பப்படுகின்றன?

இல்லை. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஒரு யுவதிக்கு நேர்ந்த துயரம்தான் ஆதாரம்…

SHARE