“பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதியளித்த மஹிந்த அரசு, தற்போது பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து தமது அரசியலுக்கான ஒட்சிசனைப் பெற முயற்சிக்கின்றது” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

327

 

“பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதியளித்த மஹிந்த அரசு, தற்போது பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து தமது அரசியலுக்கான ஒட்சிசனைப் பெற முயற்சிக்கின்றது” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையிலேயே மஹிந்த மீண்டும் நாட்டின் ஜனாதிபதியானால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நாளும் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார். நாம் அவரைத் தோற்கடித்த எமது பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டி, கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

Gota-and-MR-smiling_CI

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க சமூக வலைத்தளங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதிகாரமில்லாததால் – பணம் தேட முடியாததால் தமது ஆதரவாளர்களைக்கொண்டு எமக்கு எதிராக புரட்சியொன்றை ஆரம்பிக்க மஹிந்த படையணி முயற்சிக்கின்றது. அதனால், மஹிந்த படையணியின் அந்த எதிர்மாறான புரட்சியை நாம் உடனடியாகத் தோற்கடிக்கவேண்டும். தமது அரசியல் வங்குரோத்தை மூடி மறைப்பதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ இனவாதத்தைத் தூண்டிவிட நடவடிக்கை எடுக்கின்றார்.

z_p02-Water-03

நாட்டில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டால் அதை வைத்து அரசியல் நடத்தும் நிலைக்கு ராஜபக்‌ஷ படையணி வந்துள்ளது. நாட்டில் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு தமது பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுமதி வழங்கிய மஹிந்த அரசு, பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வைத்து தமது அரசியலுக்கு ஒட்சிசன் பெற முயற்சிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரது படையணியும் தமது கவலையைத் தெரிவிக்காமல், மஹிந்த நாட்டில் ஜனாதிபதியாக இல்லாததால்தான் இந்த நிலை என்று கூறுகின்றனர். உண்மையிலேயே மஹிந்த மீண்டும் நாட்டின் ஜனாதிபதியானால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நாளும் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்.

நாம் அவரைத் தோற்கடித்த எமது பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம். யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இப்படியயாரு கருத்தை வெளியிடும் மஹிந்த ராஜபக்‌ஷ, தனது ஆட்சிக்காலத்தில் 100, 200 பெண்களைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதேச சபைத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாரா? யாழில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தத் துஷ்பிரயோக சம்பவத்தினூடாக – எதிர்மாறான புரட்சியொன்றை ஏற்படுத்த முயற்சிப்பதனூடாக மஹிந்த அரசியலில் எந்தவுளவுக்கு வங்ரோத்தடைந்துள்ளார் என்பது தெரியவருகின்றது.

தெற்கில் இதுபோன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தால், இங்கும் பாரிய கலவரநிலை தோற்றம் பெற்றிருக்கும். பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டால் எங்கும் முரண்பாடான நிலைமைதான் உருவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின்கீழ் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக கிளர்ந்தெழ மக்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது. இனவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் ராஜபக்‌ஷவின் எதிர்மாறான புரட்சியை உடனடியாக நசுக்கி, சர்வாதிகார மஹிந்த படையணி மீண்டும் தலைதூக்க இடமளிக்கக்கூடாது” – எனத் தெரிவித்துள்ளார்.

SHARE