பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!

507
காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள்.

அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம்.

கேள்வி மேல் கேள்வி

ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே.

சொன்னதையே சொல்வது

சில பெண்கள் தங்கள் காதலரிடம் சொன்ன விடயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதைக் கேட்கும் காதலனுக்கு பைத்தியமே பிடித்து விடும்.

பிற ஆண்களுடன் வெளியே செல்வது

ஆண்களை எரிச்சலடைய வைக்க பெண்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் பல ஆண்களுடன் ஊர் சுற்றி அவர்களுடன் கடலை போடுவது. அது அவருக்கு சரியாக பட்டாலும், ஆண்கள் அதனை வெறுப்பார்கள்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படுவது

ஒன்றுமே இல்லாத விடயத்திற்கு எல்லாம் கவலைப்படுவது பெண்களின் சிறப்பம்சமாகும். இது ஆண்களை எரிச்சலடைய செய்வது மட்டுமல்லாமல் கோபத்தையும் உண்டாக்கும்.

உணர்ச்சிவசப்படுவது

பெண்கள் என்றால் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள். அதுவும் பெண்கள் அழும் போது அவர்களுடன் இருந்தால் வெறுப்பே வந்துவிடும். பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் தலைகீழாக புரட்டி போட்டு விடுவார்.

ஊர் புரணி பேசுவது

பெண்கள் தங்கள் பொழுதை போக்க தேர்ந்தெடுக்கும் ஒரு பொதுவான வழி, பிறரை பற்றி புரணி பேசுவது. ஆண்களும் அதில் ஈடுபடுவார்கள், ஆனால் பெண்கள் அளவிற்கு இல்லை.

சுலபத்தில் சமாதானம் அடைய மாட்டார்கள்

பெண்கள் அவ்வளவு சுலபத்தில் எதற்கும் சமாதானம் அடைய மாட்டார்கள். இது கோபத்தை கண்டிப்பாக தூண்டும். ஒரு ஷாப்பிங் அழைத்து செல்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டால், ஒரு பெரிய பிரச்சனையை ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் சமாதானம் அடையமாட்டார்கள்.

SHARE