பெண் பிணைக்கைதியை கொன்றதற்கு ஐ.எஸ்-யை பழிவாங்குவோம் – ஒபாமா சபதம் 

336
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த அமெரிக்க பெண் கொல்லப்பட்டதை ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் அரிசோனா (Arizona)மாகாணத்தைச் சேர்ந்த கய்லா ஜீன் மியல்லர் (Kayla Jean Mueller Age-26) என்ற தொண்டு நிறுவன ஊழிய பெண்ணை ,கடந்த 2013ம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

சுமார் 1½ ஆண்டாக பிணைக்கைதியாக வைக்கப்பட்ட இவர், ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் இறந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்தி ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டனர்.

ஆனால் இதனை மறுத்து வந்த அமெரிக்க அரசாங்கம், நேற்று அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்செய்தியை உறுதிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், கய்லா கடத்தப்பட்டது மற்றும் மரணத்துக்கு காரணமான தீவிரவாதிகளை கண்டுபிடித்து, நீதியின் முன்பு நிறுத்துவோம் என்றும் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு பிரச்சனையே அல்ல, ஆனால் அவர்களை பழித்தீர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE