பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் முகமாலையில் மீட்பு.

569
முகமாலைப் பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அப் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியாளர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு போன்றவற்றையும் அதன் போது மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை பொலிஸார் எச்சங்களை மீட்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளது பாரிய சோதனைச் சாவடி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE