பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!

386

 

1416604852-SriLankaPRES (1)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது.

காலையில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு

மேல் மாகாணத்தில் இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தவுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை காலமும் மக்கள் காலை நேரத்தில் மந்தகதியிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக மேல்மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தவுடனேயே கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நிற்பதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

 

SHARE