பெருந்தொகை அபராதம் செலுத்திய விமான பயணி

16

 

இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பயணியின் பெட்டியில் உணவு பொட்டலம் ஒன்றை கண்டெடுத்த நிலையில், பெருந்தொகை அபராதம் விதித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலியில் ஒருவகை தொற்றுநோய் பரவுவதாக வெளியான தகவலை அடுத்து குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு அவுஸ்திரேலியா நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்த நிலையிலேயே பாலியில் இருந்து அவுஸ்திரேலியா திரும்பிய பயணி ஒருவரிடம் McDonald நிறுவனத்தின் McMuffins காலை உணவு பொட்டலம் ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட முட்டை மற்றும் மாமிச உணவு வகைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பயணிக்கு 2,400 கனேடிய டொலர் அளவுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

குறித்த கட்டணமானது அவுஸ்திரேலியாவில் இருந்து பாலிக்கு செல்லும் விமான கட்டணத்தின் இருமடங்கு என்ற போதும், விதிகளை மீறுவோர் மீது அனுதாபம் காட்ட முடியாது என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE