பெரு நாட்டில் கடும் நிலநடுக்கம்

527

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். மேலும் அலுவலகங்களில் பணிபுரிந்த ஊழியர்களும், பொது மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அங்கு தொடக்கத்தில் 5 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது 5.4 ரிக்டர் என அறிவிக்கப்பட்டது. நில நடுக்கம் லிமா கடற்கரை பகுதியில் இருந்து 72 கி.மீட்டர் தூரத்தில் ஏற்பட்டது.

அதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

SHARE