பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தீர்மானம் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

483
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் கடந்த வருடத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முனைப்பை ஆரம்பித்தது.

எனினும் அதில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன பங்கேற்பதில்லை என்று அறிவித்து விட்டன.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவே காணப்பட வேண்டும் என்று அரசாங்கம் இதுவரை வலியுறுத்தி வருகிறது.

எனினும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தீர்மானம் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகிறது.

இந்தநிலையில் இந்திய அரசாங்கமும் 13வது சரத்தை அமுல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமையால், தெரிவுக்குழுவுக்கு வராவிட்டாலும் யோசனையையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூட்டமைப்பை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE