பேய் பட மவுசு குறையவில்லை 

332
காமெடி டிரெண்ட் கோலிவுட்டை கலக்கிவந்த நிலையில் பீட்சா படத்துக்கு பிறகு பேய் படங்களுக்கு மவுசு கூடியது. வில்லா 2, யாமிருக்க பயமே தொடங்கி ‘டார்லிங்‘ வரை பேய் கதைகளாகவே திரைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து ‘ஒரு நொடியில்’  என்ற பெயரில் பேய் படம் உருவாகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றினால் இறந்த ஒரு பெண் ஆவியாக வந்து ஊரில் உள்ளவர்களை பலிவாங்குவதுபோல் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஹீரோயின்கள். ஆனந்தராஜ், சிசர் மனோகர், பிருத்வி, விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மகிசரளா ஒளிப்பதிவு. சாய்பர்வேஷ் இசை. கே.கோடீஸ்வரராவ் தயாரிப்பு. எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார்

 

SHARE