நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்ந் தேர்ச்சியாக மீறப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் நாங்கள் முகம் கொடுக்கவுள்ள எமது முஸ்லிம்களின் உரிமையை தீர்மானிக்கின்ற இத்தேர்தலில் இங்கு உள்ள யாரவது ஒரு முஸ்லிம் பெளசி ஹாஜியி அதரவாளன் எனக் கூறி பொதுவேட்பாளர் மைத்திரி பாலசிறிசேனவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் ஆயின் அவர்களை மனநோய் வைத்திய சாலையில் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென்று மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி நேற்று வியாழக் கிழமை கொழும்பு கிரான்பாஸ் லியாஸ்போட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புடனான கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய பைரூஸ் ஹாஜி.. இந்த நாடில் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, கிரிஸ்தவம், இந்து, பெளத்த மதங்களை சேர்ந்த எல்லோரும் நூற்றுக்கு அறுபது வீதத்துக்கு அதிகமானவர்கள் மைத்திரிபாலவையே ஜனாதிபதியாக்குவது என முடிவெடுத்து விட்டார்கள் . இதை நான் இந்த சமூதாயத்தில் இருக்கும் பற்றினாலும், இந்த மக்கள் மீது வைத்துள்ள அன்பினாலுமே கூறுகின்றேன். பேறுவளையில் சம்பவம் நடைபெற்ற அன்றிரவே நான் அங்கு சென்றேன். ஊரடங்கு சட்டம் பிரப்பித்திருந்த வேலையிலும் நான் அங்கு மக்கள் பட்ட இன்னல்களையும், அவர்களுடைய பரிதாப நிலையினையும் கண்ணால் பார்த்தவன் என்றடிப்படையிலே இங்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்க்கின்றேன். எங்களுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் கிடையாது நானும் முஜிபுர் ரஹ்மானும் சமூதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே உங்கள் ஆதரவை கேட்கின்றோம்.
இது பளஸி ஹாஜியினுடையதோ அல்லது என்னுடைய தேர்தலோ கிடையாது. இது ஓட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமகளை பாதுகாக்கும் தேர்தலாகும். ஏனைய தேர்தல்கள் வரும்போது நீங்கள் பெளஸி ஹாஜிக்கோ அல்லது நீங்கள் விரும்ப்பும் யாருக்காவது வாக்களியுங்கள். இந்த தேர்தலில் தப்பித்தவறியோ அல்லது மறதியின்பாலோ மைத்திரிபாலவுக்கு எதிராக வாக்களித்து விடாதீர்கள். நீங்கள் மைத்திரிபாலவுக்கு எதிராகா அழிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம் சமூதயாத்தை இல்லாதொழிக்கச் செய்கின்ற வாக்க்குகளாகும் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளீர்கள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அரசாங்கத்தினுடைய கையில் இருக்கின்றது. அவர்களுக்கு தெரியும் ஒரு வீட்டில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள் என்பது. அதனால் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியின் வழிகாட்டலுடன் வெளிநாடில் வசிக்கின்ற அனைவரினதும் தகவல்களை கொண்டு நாடளாவிய ரீதியில் அடையாள அட்டைகள் வினியோகிக்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அறிந்த நாங்கள் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆகவே லியாஸ்போட்டில் உள்ள அனைத்து மக்களும் இப்பிரதேசத்துகு நாங்கள் பொறுப்பாக நியமித்துள்ள சகோதரர் ஜசூலியிடம் வெளிநாட்டில் வசிப்பவர்களினதும், மரணித்தவர்களினதும் தகவல்களை உரிய முறையில் சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு வழங்குமாறு லியாஸ்போட்டில் வசிக்கும் மக்களை கேட்டுக் கொண்டார்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்