பொதுத்தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம், அதில் அங்கம் வகிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் கோரியுள்ளன.

348

 

பொதுத்தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம், அதில் அங்கம் வகிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்த விடயம் குறித்து தமக்கிடையே கூடி ஆராந்த இந்தக் கட்சியினர் அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

Mar162012_3

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் வேலைகளை ஐக்கியதேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஆனால் தேர்தல் தொடர்பாகவே இப்போதுள்ள நிலைகுறித்தோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடி எதனையும் பேசவில்லை.

எனவே இந்த அசமந்தப்போக்கை தொடரமுடியாது. நாம், எதிர்காலத்தில் கூடி பேசி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பு சார்பாக எவ்வாறு வேட்பாளர்களை நியமிப்பது, பங்கிட்டுக்கொள்ளவது குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது. எனவே அதன் முதற்கட்டமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் , டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளோம்.

பெரும்பாலும் ஒருவாரத்துக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழுவைக் கூட்டி பேசுமாறு நாம் கட்சித்தலைவர் சம்பந்தனிடம் போரிக்கை முன்வைத்துள்ளோம். இதுகுறித்த மூன்று கட்சிகளும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

நல்ல தமிழ் மக்களும் அவைக்கு வாய்ச்ச தமிழ்த்தலைவர்களும் – வடபுலத்தான்

சும்மா சொல்லக் கூடாது, தமிழ்ச் சனங்களின்ர தலையில மிளகாயைtna cartoon-5 அரைக்கிறதில வலு விண்ணன்கள் கொஞ்சப்பேர் இருக்கினம்.  இதில ‘நம்பர் வண் ஆள்’ சுரேஸ் பிரேமச்சந்திரன். ஆளைப் பற்றி, அண்ணையின்ரை கடந்த காலம், நிகழ்காலம் பற்றியெல்லாம் சொல்லப்போனால் மகாபாரதம், ராமாயணம் எல்லாம் தோற்றுப்போகும்.

அந்த அளவுக்கு ஆளின்ரை சங்கதிகள் சாக்குக் கணக்கில இருக்கு. இப்ப அதையெல்லாம் அவிழ்த்துக் கொட்ட விரும்பவில்லை.

‘அண்ணை’ இப்ப ;ஹீரோ’மாதிரிக் ‘கலர்’ காட்டுறார். உண்மையில ஆள் ஒரு வில்லன்தான். ‘முந்தித்தான் ஆள் அப்பிடி வில்லனாக – தலைவெட்டின காரியமெல்லாம் பார்த்தவர். இப்ப அப்பிடியில்லை என்று ஆரும் சொல்லக்கூடும்’.

‘அவர் அப்பவும் அப்பிடித்தான். இப்பவும் அப்பிடித்தான். உடம்பு நல்லா விளைஞ்சு ஆளில – தோற்றத்தில மாற்றம் நடந்திருக்தே தவிர, ‘மண்டை’யில ஒரு மாற்றமும் நடக்கேல்ல’ எண்டுதான் சொல்வேன்.

முந்தித்’தலைவெட்டி’ன காரியங்களைப் பார்த்தவர், இப்ப முழுசாகவே தலைகளைப் புதைக்கிற காரியத்தைப் பார்க்கிறார். அதே காரியம்.

‘ஏலுமெண்டால், இலங்கை அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து பார்க்கட்டும் பார்ப்பம்’ எண்டு அண்ணை சவால் (‘உல்டா’) விட்டிருக்கிறார்.

இப்ப ஏன் இந்த வம்பில போன கதை? ஆரிப்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்யப் போறம் எண்டு சொன்னது?

வெளிநாட்டில இருக்கிற ‘தமிழீழம் விரும்பி’களை (புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்) மட்டும் அரசாங்கம் நாட்டுக்குள்ள வாறத்துக்கும் இயங்கிறதுக்கும் தடைவிரிச்சிருக்கு.

இந்தத் தடையால் என்ன லாபத்தை அரசாங்கம் எடுக்கப்போகிறதெண்டு தெரியேல்ல. ஆனால், இதை வைச்சுக் கொண்டு தாங்கள் லாபம் பெறலாம் எண்டு ஆளாளுக்கு யோசிக்கிறார்கள்.

சுரேஸ் அண்ணனும் அப்பிடித்தான் யோசிக்கிறார். இதுக்குத்தான் இப்பிடியொரு அதிரடி அறிவிப்பு –
சனங்களின்ரை காதில எப்பவும் பூ வைச்சுக்கொண்டேயிருக்கிறதில ஒரு அலாதிப்பிரியம்.

கொஞ்சநாள் ஜெனிவாவைக் காட்டி, சனங்களின்ரை தலையில வேண்டிய மட்டுக்கும் மிளகாயை அரைச்சாச்சு. போதாக்குறைக்கு நல்லா உப்பையும் வைச்சுக் கொஞ்சப் பேப்பர்காரரும் இணையக்காரரும் அரைச்சவை.

ஆனால், இவையெல்லாம் அரைச்சமாதிரி அங்க ஜெனிவாவில ஒரு மண்ணாங்கட்டியும் பெரிசா நடக்கேல்ல.

எண்டாலும் தாங்கள் விழுந்தாலும் தங்கட மீசையில மண் படேல்ல எண்ட மாதிரி, ‘ஏலுமெண்டால் இப்ப கூட்டமைப்பைத் தடைசெய்து பாக்கட்டும்’ என்கிறார்.  போதாக்குறைக்கு கூட்டமைப்பை அரசாங்கத்தினால் தடைசெய்ய முடியாது எண்டு ஒரு விளக்குமும் எல்லோ குடுத்திருக்கிறார் சிங்கன்.

‘கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு. ஜனநாயகத்தைப் பேணும் அமைப்பாக இருக்கிறதால அதைத் தடைசெய்யேலாது’ எண்டும் நெஞ்சை நிமிர்த்திறார்.

இதைக் கேட்கவும் பார்க்கவும் உங்களுக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது. எனக்கும் சிரிப்புத்தான் வருது. என்ன செய்வது, இப்பிடி இதுகளையெல்லாம் பார்த்துச் ‘சிரித்து வாழவேண்டியிருக்கே….!’

கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பெண்டு ஆர் சொன்னது? இவரே அதைப் பல தடவை மறுத்துக் கதைச்சிருக்கிறார்.

தேர்தல்காலங்களில ‘சம்மந்தன் எடுக்கிற தீர்மானங்கள் சர்வாதிகார முறையிலதான் இருக்கு. கூட்டமைப்பில இருக்கிற மற்றக் கட்சிகளையெல்லாம் சம்மந்தனும் தமிழரசுக் கட்சிக்காரரும் ஓரங்கட்டுகினம்… தனிப்பட்ட முறையில ஒரு ஆள் எடுக்கிற எடுக்கிற தீர்மானத்தை ஏற்க முடியாது…’ எண்டெல்லாம் பல தடவை இந்தச் சு. பி. அண்ணை பகிரங்கமாகவே – காட்டமாக அறிக்கையெல்லாம் விட்டவர்.

இப்ப கதையை மாத்தி, கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு எண்டு புதிசா ‘பெயின்ற்’ அடிக்கிறார்.

சு.பி அண்ணை மட்டுமில்லை, வேற ஆட்கள் கூட கூட்டமைப்பைப் பற்றி, அதின்ரை ஜனநாயக விரோதத் தன்மையைப் பற்றியெல்லாம் கடுமையாக விமர்சிச்சிருக்கினம்.

‘கூட்டமைப்பில் ஜனநாயகமே இல்லை. அங்க ஒண்டிரண்டு பேற்ற ஆட்டமும் ஆதிக்கமும்தான் இருக்கெண்;டு’ பகிரங்கமாகவே பத்மினி அக்கா (பத்மினி சிதம்பரநாதன்), கஜேந்திரன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, ஆனந்தசங்கரி ஐயா எண்டு கனபேர் முந்தியெல்லாம் சொல்லியிருக்கினம்.

இதைவிட கூட்டமைப்பு சில காலத்தில எடுக்கிற முடிவுகளையும் அதின்ரை நடவடிக்கைகளையும் பார்க்கவே அது எப்பிடி ஜனநாயகத்துக்கு மதிப்புக் குடுக்குதெண்டும் தெரியும்.

மற்றக் கட்சிகளை மதிக்காமல் விடுறதில்லை. அதுக்கும் அப்பால எதிர்க்கட்சிகளை அது நடத்திற விதமும் மாற்றுக் கருத்துள்ளவையளை அது மதிக்கிற விதமும் அப்பிடியானவையோட அது நடந்து கொள்கிற முறையிலயும் அதின்ரை ஜனநாயக மேன்மையை (மேலாண்மையை) அறியலாம்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எண்டு ஒரு கட்சி சொல்லுமாக இருந்தால் அது ஒரு போதுமே ஜனநாயகத்தை மதிக்காது எண்டு சொல்லித்தான் தெரிய வேணுமெண்டில்லை.

தமிழ்ச்சனங்களின்ரை காதை ஓட்டை போட்டே அதில பூவைச் செருகலாம் எண்ட சுரேஸ் அண்ணைக்குத் தெரியும். அப்பிடித் தலையைச் சுத்தி கண்ணுக்குள்ளால் விரல் விட்டு வெற்றிகண்ட சிங்கன் அல்லோ.

நல்ல தமிழ் மக்களும் அவைக்கு வாய்ச்ச தமிழ்த்தலைவர்களும்..

SHARE