எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர்)
செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
மணிவண்ணன் (சட்டத்தரணி)
ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் )
அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி – (தீவகம்)
பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) – (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)
ஆகியோர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டச்செயலகத்தில் இன்றைய தினம் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் மொத்தமாக 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை குழுக்களும் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில் தற்போது கட்சிகளுக்கான கூட்டம் நடைபெற்று வருகின்றது.