பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லட்மீர் கொள்கைகளுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி நடாத்த தேவையான அரசியல் சாசன திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் மிகவும் ஆரோக்கியமான உறவுகளைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க குற்றப் பிரேணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட போது, லட்மீர் கொள்கைகள அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமப் பதவியை ஏற்றுக் கொண்ட போதிலும் அப்போதைய அரசாங்கம், லாட்மீர் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றின் ஊடாக நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லாட்மீர் கொள்கைகள் கோட்பாடுகள் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.