பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கொள்கைக்கு மாறியுள்ளதால், அந்த அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அமைப்பை கைவிட்டுள்ளனர்.
அத்துடன் பொதுபல சேனாவின் ஆதரவை பெற்றுள்ளமை காரணமாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் சிறுபான்மை இன கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில், ஊடக சந்திப்புகளின் போது ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான கருத்துக்களை வெளியிடக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்புக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே டிலாந்த விதானகே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் ஞானசார தேரரை அமைப்பில் இருந்து நீக்கி விட்டு, பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதே அவரது திட்டம் என தெரியவருகிறது.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை வாக்குகளை ஈர்த்து எடுக்கும் சதித்திட்டமாகவும் இது இருக்கலாம் என பொதுபல சேனா அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
– See more at: http://www.tamilwin.net/show-RUmszCScKaluy.html#sthash.JUhypkLi.dpuf