பொது இடத்தில் அவமானப்பட்ட கிறிஸ்டினோ ரொனால்டோ

336
கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும்.ரியல் மாட்ரிட் அணியின் சூப்பர் ஸ்டாரும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான ரொனால்டோ தனது மோசமான நடத்தையால் பொலிஸார் முன்பு அவமானப்பட்டு தலைகுனிந்துள்ளார்.

பரபரப்பான ’லா லிகா’ கால்பந்து தொடர் சமீபத்தில் நடந்து முடிந்ததையடுத்து, ப்ரான்சின் கடற்கரை நகரமான செயிண்ட் ட்ரோபஸ்க்கு நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடச் ரொனால்டோ சென்றிருந்தார்.

அங்குள்ள இரவு விடுதி ஒன்றில், நேற்று பார்ட்டி முடிந்து இரவில் வெளியே வந்த ரொனால்டோ எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லர் முன்பு சிறுநீர் கழித்தார். கடும் போதையிலும் காருக்கு பின்னாடி நின்றபடி, மறைவாகத்தான் இந்த காரியத்தைச் செய்தார்.

ஆனால் இதை கவனித்துவிட்ட ரோந்து பொலிஸார் அவரை கூப்பிட்டு, ’இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து ரொனால்டோவை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

SHARE