பொத்துவில் காட்டுக்குள் காணாமல்போன நபர் 2 நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு

331

 

பொத்துவில் தகரம்பல காட்டுக்குள் நேற்று முன்தினம் காணாமல்போன நபர் இன்று மாலை 4.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை – 2 ஆம் பிரிவியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் றஹீம் (வயது42) என்ற நபரே காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் பொலிஸாருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்களுடன் இணைந்து பொத்துவில் தகரம்பல மற்றும் உடும்பங்குளம் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இத்தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இரண்டு நாற்களாக மேற்கொள்ளப்பட்டபோது இன்று மாலை பொத்துவில் தகரம்பல உடும்பங்குள காட்டு மலைப் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார்.

SHARE