கோத்தபாயவின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக விசாரணை

674

go_1

 

லக்பிம சிங்கள தினசரி பத்திரிகையின் ஆசிரியர் சமன் வகா ஆராச்சி இன்று புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லக்பிம பத்திரிகையில் வெளியான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய தலைப்புச் செய்தி தொடர்பான பிரச்சினை சம்பந்தமாகவே வகாஆராச்சி புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி வெளியான பத்திரிகையின் 8 ஆம் பக்கத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா சங்கத்தின் புதுவருட சந்தை சம்பந்தப்பாக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கோத்தபாயவின் மனைவி காணப்பட்டதுடன், அது தொடர்பான செய்தியில் புகைப்படத்திற்கு அருகில் “இது போலி நாணயத்தாள் இல்லை தானே” எனக் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து மறுதினம் பத்திரிகையில் அதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, லக்பிம பத்திரிகை ஆசிரியர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பட்டுள்ளார்.

வகாஆராச்சி, சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்பகால ஏற்பட்டாளராவார். அத்துடன் அவர் தற்போது ஊடக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyETdLXnr0.html#sthash.eGBZHep4.dpuf

SHARE