பொலிஸ் காணி அதிகாரம் மைத்திரி அரசிலும் சாத்தியமற்றது.

290

 

மஹிந்த அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்னும் தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களையிட்டு கருத்துத் தெரிவித்தபோது வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான பேச்சுக்கே இடமில்லை. அவை பற்றி நான் வாய் திறந்தால் எனது சொந்தக் கிராமத்துக்கோ என்னால் செல்லமுடியாத நிலை உருவாகும் எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

5

தற்போது ஆட்சியாளருக்கும், மைத்திரிக்கும் இது பெறுமதியானதே. அது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவளித்துத் தமிழ் மக்களுக்கு வாக்களித்தமையால் அவர் இவ்விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்துவார் என்பதும் அசாத்தியமானவொன்றே. ஏனெனில் இவ்விடயங்கள் தொடர்பில் மைத்திரியாகவிருந்தாலுஞ்சரி, எவராகவிருந்தாலுஞ்சரி ஆட்சியிலிருக்கும் போது கரிசனை எடுப்பின் நிச்சயமாக அவர்கள் சிங்கள மக்களின் நிராகரிப்புக்கு ஆளாகவேண்டியிருக்கும். இதை எவராவது விரும்புவார்களா?

எனவே, மைத்திரி அரசிலும் பொலிஸ் காணி அதிகாரம் சாத்தியமற்றது என்பது உண்மை.

SHARE