போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ படையை அனுப்பிய பிரான்ஸ்

327
தொடர் அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பிரான்ஸ் கூடுதல் ராணுவ படையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா(Nigeria), நைஜீர்(Niger), சாட்(Chad) மற்றும் கேமரூன் (Camaroon) பகுதிகளில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த தீவிரவாத இயக்கத்தை முடக்கும் வகையில் சாட் நாடு தலைமையில் நைஜீரியா, நைஜீர் மற்றும் கேமரூன் நாடுகளின் ராணுவங்கள் இணைந்து போராடி வருகின்றன.

தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு ஆதரவு அளித்த பிரான்ஸ், தற்போது தாக்குதலுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை நைஜீரியாவிற்கு அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் முதல் நைஜீர் நாட்டில் மட்டும் சுமார் 30 ராணுவ துருப்புக்களை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. மேலும், நைஜீர் பகுதிகளில் உள்ள போகோ ஹாரம் தீவிரவாதிகளை கண்காணிக்கும் வகையில், உளவு விமானங்களையும் பிரான்ஸ் அனுப்பியுள்ளது.

ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி, சாட் நாட்டு ராணுவ படைக்கு தேவையான எரிபொருள்கள் மற்றும் உணவுகளையும் அளித்து பிரான்ஸ் உதவி வருகிறது.

கேமரூன் மற்றும் நைஜீர் நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள சாட் நாட்டு தலைநகரான N’Djamena பகுதியில் சுமார் 600 ராணுவ படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது.

தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 5 நாடுகளிலும் ஒட்டுமொத்தமாக சுமார் 3,000 ராணுவ படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ராணுவ உதவியை குறித்து பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், போகோ ஹாரம் தீவிரவாததிற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவும் உதவியும் அளித்து வருகிறது.

நடப்பாண்டு இறுதிக்குள், பிரான்ஸ் நாட்டிலிருந்து கூடுதல் ராணுவ தளவாடங்களை அனுப்ப உள்ளதாகவும், அது தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாது எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE