போட்டி நடிகைகள் பற்றி சமந்தா பளிச் 

360



தானுண்டு தன் வேலை உண்டு என்று எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு செல்வது சமந்தாவுக்கு பிடிக்காது. தவறு என்று மனதில் பட்டால் அதை பகிரங்கமாக தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இப்படித்தான் மகேஷ்பாபுவுக்கு பின்னால் ஒரு நடிகை மண்டியிட்டு செல்வதுபோல் ஒட்டப்பட்ட பட போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து நடிகரின் ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது போட்டி நாயகிகள் பற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, ‘போட்டி நடிகைகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாமே தொழில் ரீதியான போட்டிதான். போட்டியை என்னால் சமாளிக்க முடியும் என நம்புகிறேன். இயக்குனர்கள் என்னை எதற்காக குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்கிறார்கள், மற்றவர்களைவிட நாம் எப்படி ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதை என் மனதுக்குள் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்த உணர்வை ஏற்படுத்துவதே போட்டி நடிகைகள்தான். அதனால்தான் என்னை நான் எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள முடிகிறது’ என்கிறார்

SHARE