தடுத்து நிறுத்த முடியாத இலங்கை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வைக்கூட முன்னெடுக்கத் தடுமாறி கொண்டிருக்கும் மக்களை அதிகளவில் கொண்டதான வடபகுதியை விசேடமான பிரதேசமாக கருத்திற் கொள்ளாமையானது அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற வகையில் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டுபண்ணுகின்றது.என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டுள்ளதாக பீற்றிக் கொள்கின்ற ஜனாதிபதி அந்தத் திட்டங்கள் போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா எனவும் அவர் கேள்வி ஒன்றினை எழுப்பினார்.