போலி வீசாக்களை கொண்டிருந்த சீனர்கள் கைது

169
போலியான முறையில் சுற்றுலா வீசாக்களை தயாரித்து இலங்கைக்குள் பிரவேசித்த 12 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சீன நாட்டவர்கள், கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஜூன் 3ஆம் திகதியன்று இலங்கைக்குள் வந்துள்ளனர்.

எனினும் இணையத்தின் ஊடாக இவர்கள் பயன்படுத்திய வீசா போலியானது என்று பின்னரே தெரியவந்துள்ளது

இலங்கையில் கட்டுமாண பணிகளுக்காகவே இவர்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE