போலீஸ் அதிகாரிகளை சந்திக்கிறார் டாப்ஸி 

406


 போலீஸ் அதிகாரிகளை சந்திக்கிறார் டாப்ஸி.தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் சென்ற அசின், காஜல் அகர்வால், இலியானா போன்றவர்கள் வெற்றி படங்களை தந்தும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் சென்றார் ‘ஆடுகளம் டாப்ஸி. அவர் நடித்த ‘சஷ்மே பத்தூர்‘ படம் பேசப்பட்டது. இதையடுத்து ‘ரன்னிங் சாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‘பேபி, ‘ஹமாரா பஜாஜ் என மேலும் 2 படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தற்போது ‘சுந்தரகாண்ட் என்ற இந்தி படத்தில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இது பற்றி டாப்ஸி கூறும்போது, ‘இது எனக்கு எதிர்பாராத ஷாக். இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறேன். இதற்காக விரைவில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்க உள்ளேன். அதன் அடிப்படையில் எனது நடிப்பை அமைத்துக்கொள்வேன். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் போலீஸ் சீருடையிலேயே நடிக்கிறேன். இர்பான் கான் ஹீரோவாக நடிக்கிறார். வரும் அக்டோபர்மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார்.

 

SHARE