பௌத்த பிக்குகளை தண்டிக்கும் நோக்கில் புதிய சட்டம் .

503

சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகளினால் ஒட்டு மொத்த பிக்கு சமூகத்திற்கே இழிவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு பௌத்த மாநாயக்க தேரர்களுக்கோ அல்லது சங்கசபைகளுக்கோ அதிகாரமில்லை என பிரதி பௌத்த சாசன அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே தவறிழைக்கும் பௌத்த பிக்குகளை தண்டிக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டு வருவதகாத் தெரிவித்துள்ளார்.இன்னமும் இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தேச சட்டம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மஹாநாயக்க தேரர்கள் இதுவரையில் தங்களது பரிந்துரைகளை முன்வைக்க வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனை பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றால் பாராளுமன்றில் சட்டத்தை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE