மகனை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற தந்தை

430
ஈராக்கில் தனது மகனை சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை தந்தை ஒருவர் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஈராக் நாட்டை சேர்ந்த 60 வயதுடைய Basil Ramadan என்பவரின் மகன் Ahmed Basil(வயது 18).

இவரும் மற்ற 7 நபர்களும் சேர்ந்து ஒரு தனி பொலிஸ் உளவு குழுவை உருவாக்கினர். இவர்கள் 8 பேரும் சன்னி இஸ்லாமிய மதத்திற்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்தனர்.

தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல் திட்டங்கள் உள்ளிட்டவைகளை ரகசியமாக உளவு பார்த்து ஈராக் அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கைகளை கண்டுபிடித்த தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 8 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர்களின் படங்களையும், வீடியோவையும் வெளியிட்ட தீவிரவாதிகள் தங்களின் இருப்பிடத்தையும் ரகசிய திட்டங்களையும் ஈராக் அரசாங்கத்திற்கு தெரிவித்த குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர் என அறிவித்தனர்.

’ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்க்கும் அனைவருக்கும் இதே நிலைதான் ஏற்படும்’ என மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனது மகனை இழந்த Basil Ramadan தீவிரவாதிகளை பழிக்குப்பழி வாங்க முடிவெடுத்தார்.

இதனிடையில் பாக்தாத் நகரில் உள்ள Tikrit என்ற இடத்தில் காரில் வந்த தீவிரவாதிகளை Basil Ramadan தனது ஏ.கே 47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதில் 7 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீவிரவாதிகளை பழிக்குப்பழி வாங்கிய Basil Ramadan தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மகனை கொன்ற தீவிரவாதிகளை பழிக்குப்பழி வாங்கிய தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE