முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் றோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தான் அதில் இருந்து விலகி கொண்டதாக பேராசிரியர் நளின் டி சில்வா நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq3F.html#sthash.RrzX5bqk.dpuf