மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்லவில் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.

353

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதினால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்றத்தினுள் 100ற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்.

சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் 15 kik for pc download நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தும் வகையில் இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.Mr-Meeting Mr-Meeting-01 Mr-Meeting-06

SHARE