மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா

143

 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

11d9c-screen-shot-2015-01-19-at-9_41_05-am

இரத்தினபுரி அல்லது குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே, மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டிருந்தார்.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அந்த மாவட்டங்களின் முக்கிய தலைவர்கள் அதற்குச் சாதகமான பதிலை அளிக்கவில்லை.

அதேவேளை, தனது சொந்த மாவட்டமாக அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளார்.

அவரது மகன் நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதாலேயே, மகிந்த ராஜபக்ச அங்கு போட்டியிட விரும்பவில்லை.

இந்தநிலையில், சுதந்திரக் கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு, அதற்கு இணக்கம் தெரிவித்தால், கம்பகா மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிடக் கூடும், என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச கம்பகாவில் களமிறங்குவதை தடுக்கும் நோக்கிலும், அங்கு தனது செல்வாக்கை நிரூபித்து மகிந்தவின் வாக்குகளை உடைக்கும் வகையிலும், சந்திரிகா குமாரதுங்க களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போட்டியில் குதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமென்றால் சந்திரிகா குமாரதுங்கவும் களமிறங்குவார் என்று அவரது செயலர் பி.திசநாயக்க நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், ”முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவார்.

கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுமாறு அவரை நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர், அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் அந்தப் பதவிக்கு உரிமை கோரும் போது, நாட்டின் தோற்கடிக்கப்படாத தலைவரான சந்திரிகா குமாரதுங்க அதே பதவியை கட்சியிடம் கோருவதற்கு உரிமை உள்ளது.

அவருக்கு போட்டியிடுவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. இது அவரது தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சி. எனவே அவர் நிச்சயம் போட்டியிடுவார்.

இரண்டு மூன்று நாட்களில் அவர் தனது முடிவை அறிவிப்பார்” என்றும், சந்திரிகா குமாரதுங்கவின் செயலர் தெரிவித்துள்ளார்.

 

රටේ දේශපාලන බලය යළි අත්පත් කර ගැනීමට උත්සාහ කරන්නේ තමන් කළ සොරකම් වසා ගැනීමට අවශ්‍ය පුද්ගලයන් බව හිටපු ජනාධිපතිනි චන්ද්‍රිකා කුමාරණතුංග ප්‍රකාශ කළා. තම ඡන්ම දිනය නිමිත්තෙන් හිටපු ජනපතිනි චන්ද්‍රිකා බණ්ඩාරනායක කුමාරණතුංග අද මහනුවරට ගොස් මල්වතු, අස්ගිරි මහානාහිිමිවරුන් බැහැදුටුවා. ඉන් අනතුරුව මාධ්‍ය වෙත අදහස් දක්වමින් ඇය කියා සිටියේ රට සංවර්ධනය කිරීමට තමන්ගේ දායකත්වය ලබාදෙන බවයි.

SHARE